எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 டிசம்பர், 2014

இலைக்குழந்தைகள்.

முதல் இலை உதிர்கிறது.
அடுத்தடுத்து ஒவ்வொன்றும்.
தனிமையின் மிச்சத்தோடு
சருகுவழி மிதந்து இறங்குகிறது வெய்யில்.
உஷ்ணம் கக்குகிறது
உதாசீனமாய் மிதிக்கப்படும் பூமி.
நெடுஞ்சாலையில் ஓடும்
வண்டிகளின் பின்னெல்லாம் ஓடிப்
புழுதியாகின்றன சருகுகள்.

வரண்ட நாவுகளோடு எஞ்சிய மரம்
எப்போதும் வேதனையைக் கிளர்த்துவதில்லை.
உள்பொதிந்த ஈரத்தைப் பூமி
வேர்களுக்கு ஊட்ட மறந்ததில்லை.
பூம்பொரியாய்க் கிளைக்கும் இலைகள்
உலர் காற்றில் ஈரமணத்தோடு
பசிய இலை முகங்களாய்த் தோன்றுகின்றன.
இந்த வருடத்தின் வசந்தகாலம்
இலைக்குழந்தையாய்த் தவழத் தொடங்குகிறது.

6 கருத்துகள்:

  1. உருவகத்தின் மூலம்
    வெறுமைப் போக்கி
    நம்பிக்கையூட்டிப் போகும் கவிதை
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கவிதையில் பதிலளித்தமை அழகு. நன்றி ரமணி சார் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ :)

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...