எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 மார்ச், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் :- பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல

பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல


2. பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல :-

பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல

படிச்சுப் போட்டா கவலை இல்ல

பிறகு படிக்கலாம்னு ஒத்திப்போடாதே

நேரம் பத்தலைன்னு விட்டுப்புடாதே.


திட்டம் போட்டு அட்டவணை போடு

தினமும் அதன்படி படிச்சுப் போடு

பக்கத் துணையா குறிப்புகள் எடு

பதட்டமில்லாம சொல்லிப் பாரு


ஒண்ணோடஒண்ணா வார்த்தையக் கோர்த்துக்கோ

ஒப்புரவா அதை மூளையில் சேர்த்துக்கோ

சந்தேகம் வந்தா சார்கிட்ட கேட்டுக்கோ

சஞ்சலமில்லாம சரளமா எழுதப்பழகிக்கோ


கேள்வித்தாள் ஒண்ணும் வேள்வித்தாள் இல்ல

சரியான பதில்களால எதிர்கொள்ளு புள்ள

நேரத்துக்குத் தூங்கி ஒழுங்கா சாப்பிட்டு

பரிட்சைக்குப் புறப்படு பதட்டமின்றி வெற்றி பெறு.


-- இதை எடிட் செய்த பிறகு , 

பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல
படிச்சுப் போட்டாக் கவலை இல்ல
அப்புறம்னு ஒத்திப் போடும்
தப்பை நீயும் செஞ்சிடாதே.!

திட்டமிட்டுப் பாடங்களை
அட்டவணை போட்டுப் படி.!
வெட்டி அரட்டை விளையாட்டை
ஒட்ட நிறுத்தித் தூக்கியடி !

குறிப்புகளை எழுதிப்பாரு
சரிதானான்னு சொல்லிப் பாரு !
பரிட்சை நேரம் பயமில்லாம
குறிச்சதெல்லாம் நினைச்சுப் பாரு !

நேராநேரம் தூங்கிவிடு 
நீண்டபோது விழிச்சிடாதே !
காலாகாலம் உண்டுவிடு
ஜெயமேதான் கவலை விடு. !


டிஸ்கி :- தேனாஞ்சி என்ற புனை பெயரில் 2016 மார்ச் மாத கோகுலத்தில் வெளியானது. அட்டைப்படத்தில் சிறப்பிடம் கொடுத்த கோகுலத்துக்கு நன்றி. !


8 கருத்துகள்:

  1. தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு, தக்க நேரத்தில் நம்பிக்கையூட்டும், அவசியமான பயனுள்ள பதிவு. பிரசுரம் ஆனதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்கு ஆச்சி. ஏன் திடீர்னு புனைப்பெயரில் எழுத ஆரம்பிச்சுட்டீங்க?

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார்

    நன்றி லதானந்த் சார். எடிட்டிங்க் பண்ண பிறகு திருத்தி வெளியிட மறந்துட்டேன்.

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி கோபி. ஆமா புனை பெயரில் எழுதினா வித்யாசமா இருக்கும்னுதான் :) அழ வள்ளியப்பா மாதிரி குழந்தைக் கவிஞரா ஆகணும்னும் எண்ணம். எனவே வழக்கமா கட்டுரை கதை கவிதை எழுதுற மாதிரி சொந்தப் பேரில் எழுதாம புனைபெயரில் எழுதுவோம்னுதான் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...