எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஜூலை, 2017

திருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.



திருமயம் கோட்டையில் வெள்ளையனை மிரட்டிய விஷயங்கள் எனக் குறிப்பிட்டிருந்தது இந்த பீரங்கிகளைத்தான். கோட்டையின் உச்சியில் பாஸ்டியன் எனப்படும் ட்ரப்பீசிய/சதுர அமைப்பின் மேல் நிறுவப்பட்டிருக்கும் இவை வார்ப்பிரும்பில் செய்யப்பட்டவை.




சேதுபதி ராஜா காலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் இது எப்போது நிறுவப்பட்டது எனத் தெரியவில்லை. அதே 17, 18 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டில் முத்தரையர்கள் ஆண்டிருக்கிறார்கள். அப்போது கோட்டையில் எழுப்பப்பட்ட சிவ விஷ்ணு கோயில்களுக்குத் திருப்பணி செய்திருக்கிறார்கள். அதன் பின் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், இராமநாதபுரம் மன்னர், புதுக்கோட்டை மன்னர் ஆகியோரால் ஆளப்பட்டிருக்கிறது இக்கோட்டை. பாளையக்காரர்களின் யுத்தத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறது.




இதை ஊமையன் கோட்டை என்றும் சொல்கிறார்கள். மலையின் ஓரிடத்தில் சிறு கருவறையாக செதுக்கப்பட்டு சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் அதன் எதிர்ப்புறம் ஒரு மறைவிடம் இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பாக பூட்டப்பட்டுள்ளது. இதை கட்டபொம்மன் தஞ்சமடைந்திருந்த இடம் என்றும், ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்றும் சொல்கிறார்கள். அதனால் இது ஊமையன் கோட்டை எனவும் வழங்கப்படுது. ஒரே இருட்டாக இருக்கிறது. உள்ளே சில தூண்கள் தெரிகின்றன


இதன் அமைப்பைப் பார்க்கும்போது மிகச் சிறப்பான போர்ப் பாசறையாக இது இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. எதை வைத்துச் சொல்கின்றேன் என்றால் இந்த நன்னீர் சேமிப்புக் கிடங்கைப் பார்த்துத்தான். இது பாதுகாப்பாக இரும்புக் கிராதிகளால் அடைக்கப்பட்டுள்ளது. ஓவர் ஹெட் டாங்க் போல இருக்கும் இதிலிருந்து கோட்டைக்குள் தண்ணீர் குழாய்கள்மூலம் கொடுக்கப்பட்டிருக்கலாம். இது குஜராத், ஜெய்ப்பூர்  கோட்டைகள் போல மழைநீர் சேமிக்க அமைக்கப்பட்டிருக்கலாம்.





தெற்கு வாசலில் இரண்டு பீரங்கிகள் என்று சொன்னார்கள். இன்னும் ஐந்தாறு இருப்பதா சொல்றாங்க. ஒண்ணு இங்கே இருக்கு மிச்சதெல்லாம் எங்கே. ( என்னது அதுதான் இதுவா. ஹாஹா அடுத்த முறை அவற்றையும் தேடி எடுத்துப் புகைப்படம் போடுறேன். )




தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இதில் வெவ்வேறு இடங்களில் சுரங்கப் பாதைகள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சிவன் விஷ்ணு கோயில்களில் இருந்தும் சிவலிங்க சேம்பரிலிருந்தும் இந்த ஊமையன் ஒளிந்திருந்த இடத்திலிருந்தும் கோட்டையை விட்டு வெளியே வெகுதூரம் செல்லக்கூடியதான சுரங்கங்கள் போரின் போது பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அத்யாவசிய உணவுத் தேவைகளை நிறைவேற்றவும், அவசரம் என்றால் தப்பிச் செல்லவும் உதவி இருக்கலாம்.




எவ்வளவு தேடியும் ஒண்ணுதான் அம்புட்டுச்சு J ஒண்ணு இங்கே இருக்கு மிச்சதெல்லாம் எங்கே.




டிஸ்கி:- இதையும் பாருங்க. 

திருமயம் கோட்டையில் ஒரு உலா. 


4 கருத்துகள்:

  1. பலமுறை இப்பகுதியைக் கடந்து சென்றிருக்கிறேன்
    இருப்பினும் ஒருமுறைகூட இம்மலையில் எறிப் பார்த்ததில்லை
    அவசியம் அடுத்தமுறை மலை ஏறிபார்க்க வேண்டும்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. பழம் பெரும் பொக்கிசங்கள்.....

    அனைத்து படங்களும் அழகு...

    பதிலளிநீக்கு
  3. PARTHEENGKALA JAYAKUMAR SAGO

    AAM ANU. NANDRI


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள் தகவல்கள்!! பொக்கிஷம்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...