எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 அக்டோபர், 2017

சாரல்கவரியும் மழைச்சலங்கையும்

1601. avoid bubble busters and work for progress.. happy morning makkass..

1602. தலைவர் சிலமுறை முட்டாளே என்று திட்டி இருக்காரு. சீறி எழுந்து சினக்கும் நான் இன்று சிரித்து அனுபவித்தேன். ஒருவேளை பழகிருச்சோ

1603. அன்பை அதிகம் ஊற்றினாலும் நட்புத்தாவரம் பட்டுவிடும்.

1604. தனக்குத்தானே சாரல்கவரி வீசிக்கொள்கிறது மழை.ஒரு கையில் மிஷ்கின், இன்னொரு கையில் இதமான சூட்டில் நரசூஸ், பால்கனி சேரிலும் குட்டிமுத்தம் இட்டு இழுக்கிறது மழை. கொசுவலைத் தடுப்பின் பின் பின் சேரில் விழுந்து ஆடி மடிசாயும் மிளகாய்ச்செடியின் பூவும் நானும் மழையுடன் கைகோர்க்க காற்றும்  குளிருடன் நடனமாடத் துவங்குகிறது. 

1605. சரம் சரமாய்க் குதித்திறங்குகிறது மழை , ஒருமுறை ஆமோதிப்பாய் "ம்" என்று சொன்னதற்கு.  தேர்வடமாய் என்னைச்சுற்றி முறுக்கி இழுத்தாட்டுகிறது . மூழ்கி எழுந்து இலையைப் போல மிதந்து மிதந்து பின்னே போகிறேன்.

1606. அளவற்ற பெருவெளி நீர்த்திப்பியால் நெகிழ, சந்தோஷமாய்க் கரைந்தோடுகிறது சேறு, சுயமிழத்தலில் இவ்வளவு இன்பமா

1607. பால்கனிச்சுவரில் ஒண்டி துளசியும் மிளகாயும பாலக்கும் ஆச்சார்யக் கண்கொண்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன திடீரென நடனத்தை நிகழ்த்திய மழையை. எனக்குத்தான் பதக் பதக் என்கிறது எங்கே மழை தன் சலங்கை உதறி அவற்றைத் தள்ளிவிடுமோவென.

1608. என்ன அநியாயமா இருக்கு. இவுங்களுக்கு சுகர் பிரஷர்னா நம்ம கண்ணுல காமிக்கிற பிரசாதத்தைக் கூட துக்ளியூண்டு செய்றாங்க.

1609. excellent !. our emtions affects our DNA and our DNA shapes the world around us. ! /// ennam pol vazhvu.. & ethai ninaikirayo athagavey aagiray .. appidinnellaam thamila solvangka.. ! ////

1610. What's on your mind. னு டெய்லி கேக்குது எஃபி. நாம பிள்ளைங்க வூட்டுக்காரரு அம்மா அப்பாவை என்னிக்காச்சும் இப்பிடிக் கேட்டு அக்கறைப் பட்டிருக்கமான்னு நினைச்சேன். சுத்த வேஸ்ட் நாம

1611.மாற்றம் ஒன்றே மாறாததுன்னு புரிஞ்சு வைச்சிருக்கு எஃபி .

#சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் # எஃபி ராக்ஸ்

1612. தலைக்கனம் கூட சிலருக்கு அழகுதான்..


1613. சில லைக் விஷ லைக்காவும் சில லைக் விஷம லைக்காவும் இருக்கு. புதுசா லைக் போட்டிருக்காங்களேன்னு போய் பார்த்தா நாம யதேச்சையா போட்ட போஸ்டை  (ப்லாக் போஸ்டை எல்லாம் ஃபேஸ் புக்குல ரீஷேர் பண்றேன் ) அவங்களுக்குன்னு நினைச்சுக்கிட்டு நக்கலடிச்சு போஸ்ட் போட்டுருக்காங்க. தினமும் சோதனையும் வேதனையுமா போதும்டா சாமி இந்த நட்பு.

1614. 1.:- அவர் ரொம்ப பணக்காரர்னு எப்பிடி சொல்றீங்க.

2.;- அவரோட மூத்த மாப்பிள்ளை பைப்புக் கடை வைச்சு சம்பாதிச்சவரு. ரெண்டாவது மாப்பிள்ளை யுபிஎஸ் பாட்டரி கடை வைச்சிருக்காரு.


1615. ஒருவர் மேல் உள்ள வெறுப்பு இன்னொருவரின் வெற்றிக்கு வாய்ப்பாகிறது.

1616. இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களே . டேய் ஒரு மாசம் தூக்கம் அம்பேலா.

1617. அசந்தர்ப்பமா எல்லாத்துக்கும் பிறந்தநாள் பலூனை கஷ்டப்பட்டு ஊதி பறக்கவிட்டாலும் பார்க்க செமயா இருக்கு. அதொன்னுமில்ல முன்ன ப்லாக் இப்ப எஃபி.. கண்மூடித்தனமான பியார் பை கிரேசி லேடி :)

1618. அப்படி என்னைப் பலி கொடுக்க என்னால் முடியாது. ஒரு காலத்தில் நான் அப்படி நினைத்திருக்கலாம். இப்போதும் கூட அதற்கு நான் ஆசைப்படலாம். ஆனால் என்னுடன் இருந்தால் அவள் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிடுவாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். அதனாலேயே  நான் அவளிடமிருந்து விலகிப் போகிறேன். இன்று காலை ஏழு மணிக்கு அவளைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் ஒருவேளை நான் இப்பொழுது அப்படிப் போகாமலும்கூட இருக்கலாம். அவள்மீது நான் வைத்திருக்கும் அன்பை ஏற்றுக்கொள்ள அதைத் தாங்கிக் கொள்ள அவளது அகந்தை அவளை ஒருபோதும் அனுமதிக்காது. அதனாலேயே அவளால் என்னை மன்னிக்கவே முடியாது. முடிவில் நாங்கள் இருவருமே அழிந்துதான் போவோம்.

-- நஸ்டாஸியா பற்றி அக்லேயாவிடம் மிஷ்கின் - அசடனில்

1619. ”எனக்குப் பின்னால் என் நினைவாக ஒரு சிறிய நினைவுச்சுவட்டைக்கூட விட்டு விட்டுப் போவதற்கு எதுவுமே இல்லாதவனாக, ஒரு சின்ன ஓசையோ. ஏதேனும் ஒரு சின்னத் தடமோ, தடயமோ, ஒரு சிறிய நற்செயலோ - இது போல எதையுமே விட்டு விட்டுச் செல்லாதவனாகவே நான் போகப் போகிறேன்.” -- இப்போலிட் -- அசடனில். -- சுசீலாம்மாவின் மொழிபெயர்ப்பு.

ஹ்ம்ம் நானும் கூட அப்படித்தான்.

*. திடீரென அனைத்திலிருந்தும் தொலைந்துபோய்விடும் ஏக்கம் இவருக்கு மட்டுமா. எனக்கும்தான்.  :)

சிலசமயம் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக அங்கிருந்தே அகன்று போய்விட வேண்டுமென்றும் அவனுக்கு ஏக்கமாக இருந்தது. எவருமே இல்லாத ஒரு இருட்டான இடத்திற்குச் சென்று தன்னுடைய எண்ணங்களோடு மட்டுமே தனித்திருக்க முடியுமானால், அவன் எங்கிருக்கிறான் என்பதைப் பற்றி எவருக்குமே தெரியாமல் அவன் மட்டும் அங்கே இருக்க முடியுமானால் - தான் அப்போது மிக மகிழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. .................... இந்த இடத்தில் அவன் அடியோடு மறக்கப்பட்டாக வேண்டும். ஆமாம், நிச்சயமாக அவனை அங்கிருப்பவர்கள் மறந்துவிடவேண்டும். இங்கே இருப்பவர்கள் எல்லோருமே அவனை அறியாதவர்களாகவும் நடந்ததெல்லாம் ஒரு கனவாக மட்டுமே இருந்தாலும் கூட எவ்வளவு நன்றாக இருக்கும்.

-- அசடனில் மிஷ்கின்.

1620. குதிரை வாங்கிட்டேன்னு பெருமைப்பட்டுக்கலாம். கொள்ளுத் தின்ன வைச்சுட்டேன்னு பெருமைப்பட்டுக்க முடியுமா... அது இஷ்டத்துக்கு திங்குதா, நம்ம இஷ்டத்துக்கு கட்டுப்பட்டு திங்குதான்னு ஒரே ஃபீலிங்க்ஸ்.. இதப் படிச்சிட்டு ..நோ நோ யாருக்கும் கொலை வெறி வேண்டாம் ப்ளீஸ்..
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...