எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

நான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.

கல்லூரியில் படிக்கும்போது பாடம் நல்லா எழுதுறமோ இல்லையோ படம்நல்லாப் போடுவேன். தினம் ரெக்கார்ட் நோட் வரையிறதையே ப்ளஸ்டூவில் இருந்து காலேஜ் வரை ஒரு தவம் மாதிரிப் பண்ணிட்டு இருந்தேன்.

முதல் இரண்டு வருடம் பிஸிக்கிஸ் ஆன்சில்லரி. மூன்றாம் வருடம் ஸூவாலஜி. அதே போல் முதல் இரண்டு வருடம் மொழிப்பாடங்கள் உண்டு. தமிழ் & ஆங்கிலம். மூன்றாம் வருடம் மேஜர் சப்ஜெக்ட்ஸ் மட்டும்தான்.

இந்தப் படம் THE SECRET OF WORK BY VIVEKANANDA என்ற ஒரு  ஆங்கில அசைன்மெண்டுக்காக வரைந்தது. மிஸ் இதுக்காக நாலரை மதிப்பெண் கொடுத்திருக்காங்க. :)

மணியம் செல்வன், கோபுலு, ராமு, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, ஜெயராஜ், மாருதி என்று எனக்குப் பிடித்த ஓவியர்கள் அதிகம். இவர்களின் பாணியை வைத்தே சொல்லிவிடலாம்.  மசெவின் நாயகிகள் ஆங்கில வனிதைகளாகவும் ஜொலிப்பார்கள். திட்டமான எல் போன்ற மூக்கும் நேர்க்கோடுகளும் இவர் ஸ்பெஷல். சொஃபிஸ்டிகேடட் & ரிச் லுக் இருக்கும் இவரது ஓவியங்களில். மேன்மக்களைப் போல இருப்பார்கள் அனைவருமே.

கோபுலு அதிகம் நாடகம், சிறுகதைகளில் மனிதர்களின் செழிப்பான உருவத்தையும் நல்ல கிளி போன்ற மூக்கையும் வரைவார். தீர்க்கமான ஓவியங்கள். சமூகத் தொடர்களில் இவரது ஓவியம் பரிச்சயம்.

ராமுவின் ஓவியங்கள் சுருட்டைக் கேசம் போல் சுருண்டு சுருண்டு இருக்கும் . அந்த ஒவ்வொரு சுருளும் வெகு அழகாக வந்து மனதிற்குள் ஒரு உருவைப் படைப்பது அற்புதம். அக உணர்வைப் படைக்கும் ஓவியங்கள். வெகு தீவிரமான ஓவியமொழி இவருடையது.

ஆதிமூலம் ஓவியத்தில் முகத்தின் நிழல்களும் பேசும். !. கோட்டுச்சித்திரபாணி இவருடையது. வெகு சிக்கலானது . சில சமயம் கறுப்பு வெள்ளைப்  புகைப்படங்கள் போன்றது.

ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியம் கம்பீரமானது. ஒன்றில் ஒன்றைக் கொண்ட இரட்டை ஓவியங்களாக இருக்கும். மனிதர்களும் பொருட்களும் கலந்து கட்டி நம்மை அக்கதையின் கருவை தீவிரமாக உணரவைப்பார்கள். சாட்டையை வீசியது மாதிரி  ஒரு அடர் மொழி கொண்டது இவரின் ஓவியங்கள்.

ஜெயராஜ் கேட்கவே வேண்டாம் ஓவிய உலக பிரம்மா. பெண்களையும் ஆண்களையும் செக்ஸியாகப் படைத்து உலவ விடுபவர். சுஜாதா கதைகள் என்றால் இவர் படம்தான் ஞாபகம் வரும். அபாரமான , அபாயகரமான சடன் ஸ்ட்ரோக்குகள் இவரின் ஸ்பெஷாலிட்டி.

மாருதி காவியக் காரிகைகளைப் படைத்துக் காதலிக்க வைப்பவர். இவரின் நாயகிகள் சுருட்டைக் கேசமும், அழகிய இதழ்களும் காந்தப் பார்வையும்  கொண்டு காதலிக்க வைப்பவர்கள். இவரது ஓவியங்களைப் பார்க்கும்போது தண்ணென்ற குளிர்ச்சி பரவும்.  இவர்கள் அனைவருமே என் ஆசான்கள். நான் ஒரு பத்துப்பன்னிரெண்டு படம்தான் வரைந்திருப்பேன். அதுவும் மூன்று நான்கு மணி நேரம் எடுக்கும். ரப்பர் எல்லாம் போட்டு அழிப்பதுண்டு :) எடுத்தவுடன் மெல்லிசாக அவுட்லைன் போட்டுப் பின் வரைவேன். பென்சிலாலும், பேனாவாலும் இண்டியன் இங்காலும் ( பேனாவில் தொட்டு ) வரைந்ததுண்டு. முன்பு கூட நான் கலந்துகொண்ட காம்பெடிஷன்களின் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களைப் போட்டிருந்தேன்.

இந்த ஓவியப்  பெண் மண்டி போட்டிருக்கும் பொஸிஷன் சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது . அதேபோல் டிசைன் சங்குபோல் அல்லது குட்டிக் கொம்பு போல் ( கொம்பூதுதல் )  ஒன்றை வரைந்துள்ளேன். சங்கு இப்படி இருக்குமா தெரியல. :) தலையிலிருந்து விழும் சல்லாத்துணி ரொம்பப் பிடித்தது.
இது யாரோ வரைந்ததை பத்ரிக்கையில் பார்த்து வரைந்திருப்பேன் என நினைக்கிறேன். ஹாஸ்டலில் இருக்கும்போது ஓவியக்காரி என நினைத்துப் பார்த்த வெட்டி வேலைகள் இப்போது ப்லாக் போஸ்டாக உதவுகின்றன. :)



என் படங்களில் எனக்கு கண்ணின் தீர்க்கமும் நாசியின் கூர்மையும் பிடிக்கும் :) சங்குக்கழுத்தழகி. அலை அலையாய்க் கூந்தல். அதுக்கான சிம்பாலிக்கா அவளுக்கு வெளியேயும் பேக்ரவுண்டில் அலைகள் வரைந்திருக்கேன். :)
இது அன்றைய என் ஹாஸ்டல் ரூம்மேட் , இன்றைய பிரபல எழுத்தாளர் உமா மகேஸ் வரைந்தது. நட்பின் பரிசு. !
கண்ணு வைச்சிடாதீங்க . அதான் இந்தப் பொண்ணுக்குத் திருஷ்டிப் பொட்டு வைச்சிருக்கேன். வரவேற்கும் அழகிய வனிதை. தலையில் சூடியிருப்பது தாமரையாக்கும்.  ரிங்க் கொண்டை, தலையில் அடுக்கடுக்காய் மணி வேலைப்பாடுகள், நெத்திச்சுட்டி, சூரியப்பிரபை, சந்திரப்பிரபை, கை நிறைய தாமரை, சுருண்ட கேசம், காதோரம் பூக்கள், அழகிய கச்சை, கைவளை, விரல்களின் நளினம், அழகிய நகங்கள் எல்லாம்  பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து வரைந்தேனாக்கும். துடி இடையும் வன்மையான கால்களும் வடிவான பாதங்களும்  இவளை வரையும் போது கொஞ்சம் தேர்ந்துவிட்டேன் என நினைத்து ரசிப்பேன். :)
இவள் மாருதியின் காரிகை போல் ஒருத்தி. ஆளுக்கொரு மச்சம் வைச்சு விட்டிருக்கேன். இந்தக் காரிகையின் கூந்தல்& அந்த ரிங் தோடு ( என்னோட ஃபேவரைட்டாக்கும் )  நிச்சயம் மாருதியின் காப்பிதான். ஆனால் மூக்கு மசெவின் பாதிப்பு. கொஞ்சம் எள்ளுப்பூ நாசி போல இருக்குல்ல :)   கழுத்துக்குக் கீழே ஜெயராஜின் பாதிப்பு.
இந்தப் பெண்  அகிலனின் சித்திரப் பாவைபோல் ஒருத்தி. எல்லாரும் காதோரம் பூ செருகி இருப்பார்கள். நாங்க அப்ப ரோஜாப்பூவை வைத்துக்கொள்வது மாதிரி :) நீண்ட கைகள், கழுத்தில் பாசி மணி மாலை அதில் இதயவடிவ டாலர், காதில் தொங்கட்டான்கள்,  விரல்களும் நகங்களும் அழகு. ஒரு கையில் பூ வேறு. :) . அப்போது  ஃபேஷனாக சீவிய தலைமுடி , கையில் வாட்ச் வேறு. இன்று வாட்ச் கட்டினால் கர்நாடகம் :)
இவங்க ஒரு குடும்பத்தலைவி. படு மார்டர்ன். விளம்பர மாடல் மாதிரி ஆனா சரிதா போல முன்புறம் வளைவாகச் சீவிய கூந்தல், காதில் ஜிமிக்கி, காதோரம் ஒரு குட்டிப் பூ. முன்புறம் வலது பக்கம் கூந்தலைப் போட்டிருக்காங்க. கம்பீரமான பார்வை.
இவங்க நார்த் இந்தியன் லேடி. தலையில் புடவையை முக்காடா போட்டிருக்காங்க. சிந்தூர் வைச்சிருக்காங்க. பட் மூக்குத்து மட்டும் வலது மூக்குல போட்டிருக்காங்க. :) புருவமும் விழிகளும் அளவான நாசியும்  இதழ்களும் கொள்ளை அழகுல்ல.
இவர்கள் கடற்கரைக் காதலர்கள். இந்தியன் இங்கில் நல்ல தீர்க்கம்.
அதே காதலர்கள் இல்லை. இவங்க வேற இளங்காதலர்கள் . தன்னை மறந்த லயத்தில் கைகளைப் பிடித்து ரசிச்சிட்டு இருக்காங்க. !. அப்போ உள்ள ஹேர்ஸ்டைல் ஆணுக்கு. ஸ்டெப் கட்டிங்க் &  நல்ல அலை அலையான கிராப் பிரசித்தம்.  அநேக இளைஞர்களுக்கு அப்போ முடிப்பிரச்சனை இல்லவே இல்லை. ! நிழல் உருவத்துல தோடு குழல் எல்லாம் வரக்கூடாது பெண்ணுக்கு ஆனா வரைஞ்சிருக்கேன் :)
இவங்க என் ஃபேவரைட் கண்ணனும் ராதையும். எண்ட்லெஸ் லவ். குழலூதும் கண்ணன், கைகள் தெளிவில்லாமல் வரைஞ்சிருக்கேன். பார்வை மட்டும் எங்கோ லயித்திருக்கிறது இருவருக்கும். ஒரு வேளை அதிலிருந்து புறப்படும் கானத்தை நினைவின் ஆழத்திலிருந்து ரசிக்கிறார்கள் போல. கண்ணனின் முண்டாசுக் கட்டும் நெற்றியில் விழும் சுருட்டை முடியும் , ராதையின் காதோரக் குழலும் வெகுகவர்ச்சி. கண்ணன் காதில் வளையமும், கழுத்தில் தாயத்தும் அணிந்து குஜராத்திகளைப்  போல உடையணிந்திருக்கிறார்.
ராதையின் கண்கள் இமைகள் நீள்வது ரொம்பப் பிடிக்கும். ரசித்து வரைந்த ஓவியம் இது. என்றும் பிரியாக் காதலர்கள். 

7 கருத்துகள்:

  1. அனைத்து ஓவியங்களும் அழகு..
    ஓவியர்களின் திறமையைக் குறித்தது அருமை..

    பதிலளிநீக்கு
  2. எழுத்தில் மட்டுமல்ல ஓவியத்திலும் உங்கள் திறமை அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. வாவ்!! தேனு உங்கள் திறமை வியக்க வைக்கிறது. படங்கள் செமை. ம செ ஓவியங்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல் நானும் ரசித்ததுண்டு. மிகவும் பிடிக்கும். அது போன்று மற்ற ஓவியங்களும்...லதா, மாருதி என்று.....

    உங்கள் படங்கள் செமையா இருக்கு...ரொம்ப அழகா வரைஞ்சுருக்கீங்க. இப்போதும் நேரமிருந்தால் வரையலாமே..(நேரம் எங்கருக்குனு கேக்கறீங்களோ!!) நீங்கள் முயற்சி செய்யலாம் என்பது என் கருத்தும் வேண்டுகோளூம்!

    பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திறமைகளை சூழல்கள் காரணமாக வளர்த்துக் கொள்ள முடியாமல் புறக்கணிக்கப்பட்டு விடப்படுகின்றனதான்....எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது உங்கள் வரையும் திறமையையும் வெளிப்படுத்துங்கள் மீண்டும்!!! அட்டசாகம் உங்கள் திறமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஒரிஜினல் ஓவியங்கள் நன்றாய் இருக்கின்றன என் தஞ்சை ஓவியங்களும் கண்ணாடி ஓவியங்களும் ட்ரேஸ் செய்யப்பட்டவையே பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி துரை சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி கீதா. முயற்சிக்கிறேன் :)

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி விசு சார்

    நன்றிபாலாசார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...