எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 நவம்பர், 2017

எங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.

ஒவ்வொரு தோழிகளுக்குள்ளும் பேசிக்கொள்ள ஏகப்பட்டது இருக்கும்போது கல்லூரிப் பருவத்தில்  நான் என் தோழிகள் ( ஆங்கில இலக்கியம் - மீனாக்ஷி, கே ஆர்கே கீதா ) ஆகியோர் இலக்கியம் பற்றியும் நாங்கள் நடத்திவந்த புரவி - பெகாஸஸ் ( PEGASUS )   என்ற இதழ் பற்றியும் கடிதங்களில் பேசி இருக்கிறோம். அலையலையாய்ப் பறக்கும் பிடரியுடன் கூடிய நல்ல கம்பீரமான பறக்கும் குதிரை அட்டையை அலங்கரிக்கும். 5 முதல் 10 இதழ் வந்திருக்கலாம்.

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதமும் இருக்கிறது. மிக அருமையான எழுத்து மீனாவுடையது. அவள் எழுதிய மூன்று கடிதங்களில் புரவி பற்றியும் அவளின் எழுத்தாற்றல் தெரிவதற்காக இன்னும் கொஞ்சமும் கொடுத்திருக்கிறேன் .

புரவியில் கடிவாளம் என்ற தலையங்கம் எழுதியது இவள்தான். அவள்தான் புரவியின் எடிட்டர் . இவளின் கடிவாளம் சாட்டையடியாக இருக்கும். பாலசந்தர் எங்க ஊர் கண்ணகி என்று படம் எடுத்த பிறகு காலத்துக்கேற்ப மாறும் பச்சோந்திகள் என்று அவரின் படங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு விளாசியவள்.   இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இன்று சாட்டர்டே போஸ்டுக்கு எழுதிக்கொடு என்றால் கூட எழுத மாட்டேன் என்கிறாள்.

ஹ்ம்ம் புரவியைத் திரும்பக் கொண்டுவரலாமா என்ற எண்ணம் அவ்வப்போது எழுகிறது. அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும். பார்க்கலாம்.

மீனாவின் 3 கடிதங்களிலும் கே ஆர் கே கீதாவின் கடிதங்களிலும் எவ்வளவு சுவாரசியம்.

இது கே ஆர் கே கீதாவின் கடிதம். அதை முதலில் கொடுக்கிறேன்.

கே ஆர் கே கீதா :-WHEN ARE YOU COMING TO MADURAI ? OR YOU 'VE DECIDED NOT TO SHOW HEAD OR TAIL IN MDU ?


MEENAKSHI TOLD ME THAT YOU WROTE HER ( ALONE?) AND SHE'S IS ANGRY WITH YOU THAT YOU VE ASKED HER IF YOU SHOULD SEND YOUR SHORT STORY. HEY, DO YOU WANT THE NEXT ISSUE TO COMEOUT OR NOT ?

நாம 4 அல்லது 5 பேர் மட்டுமே எழுதினா பத்தாது. மாகஸீன் சைஸைப் பார்க்க ரொம்ப பாவமா இருக்கு. உன்னைய மாதிரி ஒல்லியா ! WE MUST GET MORE ARTICLES FROM PEOPLE OUTSIDE OUR PURAVI MEMBERSHIP . இருக்குறதிலேயே ஒண்ணு அவுட். நளினி.

ஆமா நீ இன்னும் தொடர்பு வைச்சுக்குவேங்குறது என்ன நிச்சயம். நீ, உமா, ஃபாத்திமா எல்லாம் வெளியூரில் இருக்குற கழுதைங்கன்னுட்டு லெட்டர் கூடப் போடுறதில்லை !  PLEASE BUY SOME INLAND LETTERS IMMEDIATELY AND WRITE ONE TO ME ( URGENT ! ). LOVE, GEETHA .



இது மீனாக்ஷியின் கடிதங்கள்.

அன்புள்ள தேனம்மை,

இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். முக்கியமான கடிதமும் கூட. ( ஏன் முக்கியமானது என்று கேட்கிறாயா ? நான் எழுதுவதால்தான் !)

உன்னை ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு உமாவிடம் சொல்லியிருந்தாயாமே ? பரிட்சை பரபரப்பில் ஒரு விவரமும் கேட்டுக் கொள்ள முடியவில்லை. தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளாதே. மே 15 உமா அநேகமாக காலேஜ் வந்து உன்னையும் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவாள். அப்படி அவள் வரவில்லை என்றாலும் நீ வராமல் இருந்துவிடாதே. எங்கள் வீட்டிற்கு வரும் வழியை எழுதுகிறேன். ........................................... இரு நான் மேப் போட்டே காட்டி விடுகிறேன்.

ஏதாவது எழுதினாயா ? புரவி அடுத்த இஷ்யூவிற்கு எழுதி வைத்திருப்பாய் வரும்போது கொண்டு வரவும்.

காலேஜிற்குப் போய் உன்னையும் அழைத்து வருமாறு உமாவிற்கு எழுதியிருக்கிறேன். ஒரு வேளை அவள் வரவில்லையென்றால் நீயே வந்துவிடு.

நேரில் விவரமாகப் பேசுவோம்.

நேசங்களுடன் மீனாக்ஷி.

*   *   *   *   *   *   *    *   *   *

அன்புள்ள தேனம்மை,

...........................

வீட்டில் சும்மா உட்கார்ந்திருத்தல் எத்தனை பெரிய சோகமான விஷயம். ! நல்ல புத்தகங்களும் நிறையக்  கிடைப்பதில்லை.

ஆமா நீ என்னவெல்லாமோ எழுதி இருக்கியே, அன்னத்தில் வெளிவந்து விட்ட ஒரே காரணத்தினாலேயே ஒரு கவிதை தரமுள்ளதாயிடுமா ? இல்லை அதில் வெளிவராததாலேயே நல்ல கவிதைகளும் மதிப்பில்லாமல் போய் விடுமா ? உன் ‘வாழ்க்கை’ நல்ல முறையில் வந்திருக்கிறது. பொதுவாக ABSTRACT  விஷயங்களை நீ நன்கு கையாள்கிறாய். அடுத்த புரவியில் இதை அல்லது அடையாளத்தைப் போடலாம். சரிதானே. ?

உமாவிற்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கிறது. ஐப்பசி அல்லது கார்த்திகையில் இருக்குமாம் . நம் புரவியைச் சிதறவிடக்கூடாது என்று உறுதியாய் இருக்கிறேன். உனக்கும் அந்த எண்ணம் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

காலேஜில் சேர்ந்து ஒரு மாசம் கழிச்சு நாம அடுத்த இஷ்யூ போடலாம்

இந்த இஷ்யூவையே எல்லா காலேஜிலேயும் கொடுக்கல. நம்ம காலேஜில் மட்டும் கொடுத்துள்ளோம். நன்றாக வந்திருக்கிறது என்பது நம் ஸ்டாஃபின் அபிப்ராயம். கூடிய சீக்கிரம் எல்லா காலேஜுக்கும் அனுப்பிவிடலாம்.

..........................

கோபித்துக் கொள்ளாதே இவ்வளவு லேட்டா எழுதினதுக்கு. ’நம்மள மறந்துட்டா பாரு’ன்னு மருகிப் போகாதே. தயவுசெய்து பதில் எழுது கொஞ்சம் லேட் ஆகவேனும் .

அன்புடன் மீனாக்ஷி

*   *   *   *   *   *   *    *   *   *

நேசமுள்ள தேனம்மை,

......................

நீ மே 15 வந்தாயல்லவா ? மே 17 உமாவும் கே ஆர் கேவும்  ’திடும்’ என வந்து நிற்கிறார்கள். எனக்குத் திகைப்பூண்டை மிதித்தாற்போலிருந்தது. ( விஷயம் ஒன்றுமில்லை . நேற்றுத்தான் பழைய கதைகள் ஒரு சில படித்தேன். )

அன்று நடந்த டிஸ்கஷனில் உமா அட்டைப்படத்தை வரைந்து  கே ஆர் கேக்கு அனுப்புவதென்றும் கே ஆர் கே அதை ட்ரேஸ் எடுத்து 6 இஷ்யூவிற்கும் படம் தயாரிப்பதென்றும் முடிவாயிற்று. உமா ஒரு கவிதை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள்.

உனக்கு பொலிட்டிகல் எக்ஸாம் ஜூன் 3 இல் தானே. ஜூன் 4 ஆம்தேதி எங்கள் வீட்டிற்கு வருகிறாயா ? நாம் இருவருமாக கே ஆர் கே வீட்டிற்குப் போவோம்.  9. 30 க்குள் வந்துவிடு.

புரவிக்கு நான் என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியவில்லை. கடிவாளம் எழுதுவது கடினம். போதிய புத்தகங்கள் இல்லாமல்... பார்க்கலாம்.

ஜூன் 5 ஆம் தேதி நான் ஊருக்குப் போனாலும் போவேன். எனவே ஜூன் 4 ஆம் தேதி வந்துவிடு. வர இயலவில்லையென்றால் உடனடியாகக் கடிதம் மூலம் தெரிவி.

எழுதிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ ஞாபகம் வருகிறது. எந்த மாதிரி சிச்சுவேஷனில் இதை எழுதுகிறேன் தெரியுமா ? வெள்ளை வெயில். கொடியில் உலரும் துணிகள்.  அடுத்தாற்போலிருக்கும் கடையிலிருந்து காப்பித்தூள் வாசனை. புரவி பற்றி ஏராளமான கனவுகளுடன் நான். ஆனால் தனியே... அதனால்தான் அந்த ஞாபகம்.

‘ம். சரி’

ஜூன் 4 ஆம் தேதிக்காகக் காத்திருக்கும் ,

மீனாக்ஷி.


3 கருத்துகள்:

  1. அம்பர்நாதில் இருக்கும் போது நாங்கள் வெளியிட்டுக் கொண்டிருண்ட கையேட்டுப் பிரதி நினைவுக்கு வருகிறதுஎல்லாம் சில இதழ்கள் வரை மட்டுமே

    பதிலளிநீக்கு
  2. HAPPY TO SHARE MY FRIEND'S COMMETS REGARDING THIS ARTICLE. !

    Meenakshi Olaganathan OMG!what a pleasant surprise!
    அழகாய் விடிந்திருக்கிறது காலை!
    அன்புக்கு நன்றி தேனம்மை😊🙏



    Subathra Devi

    Puraviyil aeree Fatima College sendru vandha magilchi Meena, Geetha vin kadidhangalai padithadhil! All these letters that have stood the test of time bear testimony for the kind of unconditional love that can exist only between friends. Tons of hugs to you Thenu! I wonder if you remember me


    Geetha Kumar
    Geetha Kumar My goodness! I’m so happy to have found our long lost friend Thenammai! I’m super impressed that you’ve saved our letters for this long. Hope all is well with you, Thenu! 😀


    Meenakshi Olaganathan Yep...same feeling!

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கு நன்றி பாலா சார்

    நன்றி மீனாக்ஷி, சுபத்ரா, கீதா, & ஃபாத்திமா.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...